Our Feeds


Saturday, October 14, 2023

News Editor

ஓய்வு இழப்பீடு வழங்க அனுமதி


 அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு இழப்பீடு வழங்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகள் பொருளாதார நெருக்கடியால்  இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அதன் தலைவர் ரட்ணசிறி களுபஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திணைக்களத்தின் 1500 இற்கும் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற முன்வந்துள்ளனர் என அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான நிதி திறைசேரியால் அனுமதிக்கப்படாததால், திணைக்களம் கடந்த சில மாதங்களாக நெருக்கடியைச் சந்தித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் 3,764 மில்லியன் ரூபாவை அனுமதித்துள்ளது என திணைக்களத்தின் தலைவர் ரத்னசிறி களுபஹன அறிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »