Our Feeds


Thursday, October 12, 2023

Anonymous

ஈஸ்டர் தாக்குதல்ளுடன் தொடர்புபட்ட சொனிக் சொனிக் - அபூஹிந்த் யார்? நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழு ஜனாதிபதிக்கான கடிதத்தில் கேள்வி?

 



ஜனாதிபதியும் அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து  பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணையை நடத்துவதற்கு உண்மையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என தோன்றவில்லை- நீதிக்கான கத்தோலிக்க குழு ஜனாதிபதிக்கு கடிதம். 

அரகலய  மூலம் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து  பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணையை நடத்துவதற்கு உண்மையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என தோன்றவில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழு  தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழு  ஒன்பதாம் திகதி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கான கடிதத்தில்  தேசிய கத்தோலிக்க குழு நியாயமான சுயாதீனமான வெளிப்படையான  விசாரணையை கோரியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவேண்டும் என ஜனாதிபதி உண்மையான ஆர்வத்தை கொண்டிருந்தால் அவர் சிஐடிக்குள் இடம்பெற்ற  இடமாற்றங்களை மாற்றியமைத்து அவர்கள் விட்ட இடத்திலிருந்து விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழு  தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தற்போதைய நடவடிக்கைகள் குற்றவாளிகளை பாதுகாக்கின்றன இந்த பெரும் துயரச்சம்பவத்தின் பின்னால் உள்ள பெரும்சதிதிட்டத்தை மறைக்கின்றன எனவும் கத்தோலிக்க குழு தெரிவித்துள்ளது.

தேசிய கத்தோலிக்க குழு தனது கடிதத்தில் பல  முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடியின் முன்னாள் தலைவர் சானி அபயசேகரவின் அடிப்படை உரிமை மீறல் மனுபோன்றவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த விடயங்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள குழுவினர் எவ்பிஐ தொடர்பான முக்கியமான விடயமொன்றை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜஹ்ரானுடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்த ஐபி முகவரியை இலங்கைக்கு எவ்பிஐ வழங்கியதாக கத்தோலிக்க  குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜஹ்ராடன் தொடர்பிலிந்த அந்த நபர் கைதுசெய்யப்பட்டவேளை அவரை விசாரணை செய்வதற்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் தடையாகயிருந்தனர், எனவும் ஜனாதிபதிக்கான கடிதத்தில் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழு  தெரிவித்துள்ளது.

ஜஹ்ரானுடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்த சொனிசொனிக் என்பவர் பொலிஸ் உத்தியோகத்தர் பண்டார என குறிப்பிடப்படுவது குறித்தும் அவர் பொடிஜஹ்ரான் ஊடாக ஐஎஸ்ஐஎஸ் உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு உரிமை கோரவேண்டும் என  அழுத்தங்களை கொடுத்தார் எனவும் நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழு தனது கடிதத்தில் தொவித்துள்ளது.

ஜஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த  அபுஹிந் என்பவர் குறித்தும் ஜனாதிபதிக்கான தனது கடிதத்hதில் தெரிவித்துள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழு  அபுஹிந் என்பது ஒரு அமைப்பில்லை அயல்நாட்டை சேர்ந்த ஒருவர் என்பது விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளது ஜஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கான தனது சாட்சியங்களின் போது ஜஹ்ரான் இந்தியாவில் உள்ள அபுஹிந்துடன்  திராவிட மொழியில் 2018 முதல் உரையாற்றினார்  என தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »