Our Feeds


Sunday, October 1, 2023

Anonymous

அபகரிக்கப்படும் முஸ்லிம்களின் காணிகள் - அறிக்கை விட்டு காலம் கடத்தும் முஸ்லிம் தலைமைகள் - தீர்வு என்ன?

 



எம்.எஸ்.தீன்


இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வர்கள் முதல் ஏனைய துறைத் தலை­வர்கள் வரை தூக்க ­நி­லையில் சோம்பிப் போயி­ருப்­ப­தா­கவே தென்­ப­டு­கின்­றது. இன்று முஸ்­லிம்­களின் காணி­களை அப­க­ரிக்கும் போக்கு அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. திரு­கோ­ண­ம­லையில் இந்த நிலை கூடு­த­லாகக் காணப்­ப­டு­கின்­றது.

திரு­கோ­ண­மலை – புல்­மோட்டை அரி­சி­மலைப் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணியை அப­க­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்தும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதனை தடுப்­ப­தற்கு எந்­த­வொரு அர­சியல் கட்­சி­களும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. காணிகள் பறிக்­கப்­படும் போது வெறும் அறிக்­கை­களை மாத்­திரம் வெளி­யிடும் வழ­மை­யான நட­வ­டிக்­கை­களே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இதே­வேளை, இஸ்­லா­மிய மார்க்கத் தலை­வர்­களும், ஏனைய துறைத் தலை­வர்களும்  சமூ­கத்­தில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற இந்த அநி­யா­யத்தைப் பற்­றியும், இது விட­யத்தில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மௌன­ம் காப்பதையும்  கண்­டிக்­காதுள்ளமையும்   முஸ்லிம் சமூ­கத்தின் மீது அவர்­க­ளுக்கு அக்­கறை­யில்லை என்­ப­தனை தெளி­வு­ப­டுத்­து­வ­தாக இருக்­கின்­றது.

கடந்த 22.09.2023 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முதல் புல்­மோட்டை இலக்கம்  01 கிராம அலு­வலர் பிரிவில் உள்ள 6 முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான விவ­சாயக் காணி­களை, பல­வந்­த­மாக டோசர் இயந்­தி­ரங்­களை கொண்டு அப­க­ரிக்கும் நட­வ­டிக்­கை­களில் புல்மோட்டைப் பிர­தே­சத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஈடு­பட்­டுள்ளார்.

இத­னை­ய­றிந்த காணி உரி­மை­யா­ளர்கள் தமது காணிக்குள் அத்­து­மீறி   சென்று இத்தகைய அப­க­ரிப்பு செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை நிறுத்­து­மாறும், காணிக்­கான ஆவ­ணங்கள் தம்­மிடம் உள்­ளன எனவும், தாங்கள் பாரம்­ப­ரி­ய­மாக விவ­சாயம் செய்­து­வரும் காணி­களை விட்டு வெளி­யே­று­மாறும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.

இதன்­போது குறித்த பௌத்த பிக்கு இந்த பகுதி பௌத்த  விகா­ரைக்கு சொந்­த­மா­னது என்று தெரி­வித்­த­தோடு, இந்தக் காணி வர்த்­த­மா­னியில் பௌத்த விகா­ரைக்­கான இடம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்றும் கூறி­யுள்ளார். புல்­மோட்டை அரி­சி­மலைப் பகு­தியில் புதி­தாக பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வாறு அமைக்­கப்­படும் விகா­ரை­க­ளுக்கு அங்­குள்ள சிறு­பான்­மை­யி­னரின் காணி­களை பௌத்த விகா­ரைக்­கு­ரிய காணிகள் என்று அப­க­ரித்துக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக நடை­பெ­று­கின்­றன. இவ்­வாறு நடை­பெறும் காணி ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்­லிம்கள் பல தட­வைகள் தமது கடும் எதிர்ப்­புக்­களை தெரி­வித்­துள்­ளார்கள்.

அங்­குள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், அர­சாங்­கத்­திற்கும், மாவட்ட அர­சாங்க அதி­ப­ருக்கும் பல தட­வைகள் முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ளனர். ஆனால் எந்த நட­வ­டிக்­கை­களும் இதுவரை எடுக்­கப்­ப­ட­வில்லை. இதே வேளை, காணி அப­க­ரிப்பு நட­வ­டிக்­கைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்­லிம்­களின் காணி­களை கபளீகரம் செய்­து­கொள்­வ­தற்­காக கடந்த காலங்­களில் இவை வனப்­பா­து­காப்­புக்­கு­ரிய காணி என்றும், புனித பூமி என்றும், இதற்காக மாற்றுக் காணிகள் வழங்­கப்­படும் என்றும்கூறப்பட்டன. ஆனால், காணி­களை பறி­கொ­டுத்த முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வொரு மாற்றுத் தீர்வும் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தீர்­வு­களைப் பெற்றுக் கொடுக்­க ­முன்வரவுமில்லை. மறு­பு­றத்தில் முஸ்­லிம்­களின் காணிகளை அப­க­ரித்துக் கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சாங்­கத்­தி­னாலும், அதி­கா­ரி­க­ளி­னாலும் இன்னும் முற்­றுப்­புள்ளி வைக்­கப்பட­வில்லை என்­ப­த­னையே புல்­மோட்டை பிர­தே­சத்தில் தற்போது நடை­பெற்ற காணி அப­க­ரிப்பு நட­வ­டிக்கை எடுத்துக் காட்டுகின்­றது.

சிறு­பான்­மை­யி­னரின் காணிகளை பல்­வேறு பெயர்­களில் சூறை­யாடி, அக்­கா­ணி­களில் சிங்­க­ள­வர்­களை குடி­யேற்றிக் கொண்­டி­ருக்கும் நட­வ­டிக்­கைகள் இலங்கை சுதந்­திரம் பெற்ற நாள் முதல் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் காணி­களை மீட்டுத் தருவோம் என்று முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் முதல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பல தட­வைகள் வாக்­கு­று­தி­களை வழங்­கிய போதிலும் அவற்றை நிறை­வேற்றும் எந்­த­வொரு செயற்­பாட்­டையும் அங்­குள்ள மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற அர­சி­யல்­வா­தி­களும், முஸ்­லிம் தலை­வர்­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மேற்­கொள்­ள­வில்லை.

இப்­போது முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள மூன்று மாவட்­டங்­க­ளுக்கும் அடிக்­கடி விஜயம் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த விஜ­யங்­களின் போது  கூட முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் பற்றி பேசப்­ப­டு­வ­தில்லை.

தமது கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கட்­சியின் கிளை­களை புன­ர­மைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு விருந்­து­ப­சா­ரங்­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

எதிர்­வரும் வருடம் முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­லா­மென்று எதிர்வு கூறப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் மொட்டுக் கட்­சியின் ஆத­ர­வுடன் வெற்றி பெற வேண்­டு­மென்ற விருப்­பத்­தை கொண்­டுள்ளார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­பார்த்துக் கொண்­டி­ருப்­பது போன்று நடக்கக் கூடிய சாத்­தி­யங்கள் குறைந்து கொண்­டி­ருக்­கின்­றன. அதனால், சில வேளை­களில் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­த­லுக்கு திகதி அறி­விக்கும் நிலைப்­பாட்டைக் கூட ரணில் விக்­கி­ர­ம­சிங்க எடுக்கக் கூடிய சாத்­தி­யங்கள் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

எந்த தேர்தல் நடை­பெற்­றாலும் தங்­களின் வாக்குப் பலத்தைக் காட்­டு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் கட்­சிகள் மேற்­கொண்­டி­ருக்­கின்­றன. இத­னால்தான்; கிழக்கு மாகா­ணத்­திற்கு அடிக்­கடி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

கட்சிக்கான செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் போதுதான் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொள்ளலாம். அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாமென்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் திட்டமிட்டுள்ளார்கள்.

முஸ்லிம்களின் காணிகளை மீட்டுத் தருவோம் என்று அவர்கள் மீண்டும் சொல்லி வாக்குகளை வேட்டையாடப் போகின்றார்கள்.  கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இவ்வாறுதான் வாக்குறுதி வழங்கினார்கள். எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

ஆகவே, பொது மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் யாருடைய கைகள் சுத்தமாக இருக்கின்றதோ அவர்களை மாத்திரமே வெற்றியடையச் செய்ய வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »