Our Feeds


Friday, October 20, 2023

Anonymous

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் | கடுமையாக எச்சரித்தது சவுதி அரேபியா..!

 



அரப் நியுஸ்


GCC, ASEAN அமைப்புக்களின் தலைவர்கள் பாலஸ்தீன காசாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் கண்டித்துள்ளனர்


('மைடன்' உச்சி மாநாடு, பிராந்திய அமைப்புக்களுக்கு  இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது)


வளைகுடா மற்றும் ஆசியான் அமைப்பின் தலைவர்கள், காஸா மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர், மேலும் பாலஸ்தீன பகுதியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களையும் அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.


உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் மனிதாபிமான உதவிகள், நிவாரணப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சேவைகளை காஸாவிற்கு வழங்குவதற்கும் அழைப்பு விடுத்தனர்.


தலைவர்கள் தங்கள் அறிக்கையில், பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவர்களை குறிவைப்பதைத் தவிர்க்கவும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை, குறிப்பாக போர்க்காலத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான ஜெனீவா ஒப்பந்தத்தின் கொள்கைகள் மற்றும் விதிகளை கடைபிடிக்குமாறும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரை வலியுறுத்தினர்.


பணயக் கைதிகள் மற்றும் பொதுக் கைதிகள், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியோர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கவும் அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், மோதலுக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.


இரு பிராந்திய அமைப்புக்களின் தலைவர்களும், மத்திய கிழக்கு அமைதி செயல்முறையை புதுப்பிக்கவும், இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோதலை சர்வதேச சட்டத்தின்படி தீர்க்கவும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.


தலைவர்கள்,  இரு தரப்புக்குமிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள், கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு, 2024 - 2028 வரையிலான காலப்பகுதிக்கான ஒத்துழைப்பு உறுதிப்படுத்தினர்.


சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்கள், உச்சி மாநாட்டில் தனது தொடக்க உரையில்: பாலஸ்தீன பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளுக்கு சவுதியின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.


காசாவில் அதிகரித்து வரும் வன்முறையால் தான் 'வருத்தம் அடைகிறேன்' என்று பட்டத்து இளவரசர் கூறினார், அதற்காக அப்பாவி மக்கள் விலை கொடுக்கிறார்கள், மேலும் பொதுமக்களை குறிவைப்பதையும் அவர் உறுதியாக நிராகரித்தார்.


இந்த ஆண்டு, 10 நாடுகளை கொண்ட ASEAN அமைப்பின் ஒன்றுகூடலுக்குத் தலைமை தாங்கிய இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, தனது தொடக்க அறிக்கையில்: சர்வதேச சட்டங்களின்படி, காசாவில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.


அனைத்து துறைகளிலும் ஆசியான் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த சவுதி அரேபியா முயல்கிறது என்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் மேலும் தெரிவித்தார்.


இரு அமைப்புகளும், 1990ல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டாலும், பிராந்திய குழுக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் கூடிய முதல் உச்சிமாநாடு இதுவாகும்.


GCC ஆனது சவூதி அரேபியா, ஓமன், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கியது, அதே சமயம் ASEAN அமைப்பில்: இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், புருனே தருஸ்ஸலாம், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.


ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு தற்போது 110 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.


மொழிபெயர்ப்பு,

கலாநிதி M. H. M. அஸ்ஹர்.

பணிப்பாளர்,

பின் பாஸ் மகளிர் கல்லூரி - மல்வானை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »