Our Feeds


Tuesday, October 31, 2023

SHAHNI RAMEES

இன்சமாம் உல் ஹக் இராஜினாமா...!

 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், கப்டனுமான

இன்சமாம் உல் ஹக், மூத்த மற்றும் ஜூனியர் தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.




பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு கிளம்பும் முன் தங்கள் நாட்டின் கிரிக்கெட் அமைப்புடன் மோதல் போக்கை கடைபிடித்தது. தங்களுக்கு விளம்பர வருவாயில் பங்கு அளிக்க வேண்டும் என்றும், கூடுதல் சம்பளம் மற்றும் தங்களுக்கு சாதகமான ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தினர்.




ஊலக கிண்ணம் நெருங்கியதால் வேறு வழியின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவர்கள் கேட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்தது. அப்போது கிரிக்கெட் அமைப்புக்கும், வீரர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர் இன்சமாம் உல் ஹக் தான். அப்போதே அவர் மீது கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது.




இந்த நிலையில், தற்போது முன்னணி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் விளம்பர ஏஜென்ட்டாக இருக்கும் தல்ஹா ரெஹ்மானி என்பவரின் நிறுவனமான யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்-இல் இன்சமாம் உல் ஹக் பங்குதாரராக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இன்சமாம் உல் ஹக் விளம்பர ஒப்பந்தத்தில் இடம் பெறும் வீரர்களுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கக் கூடும் என்ற முறைப்பாடு எழுந்தது.




தற்போது அந்த விளம்பர ஏஜென்ட் பாபர் அசாம், ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது ரிஸ்வான் ஆகியோரின் விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகித்து வருகிறார்.


பதவியை இராஜினாமா செய்த இன்சமாம் உல் ஹக் தன் மீதான முறைப்பாடுகள் மீதான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »