Our Feeds


Sunday, October 15, 2023

Anonymous

பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் | பிரான்ஸ் முழுவதும் 7 ஆயிரம் ராணுவம் குவிப்பு

 



பிரான்சில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


பிரான்சில் தடையை மீறி பலஸ்தீன ஆதரவு பேரணி இடம்பெற்றது. மேலும் அதில் வெடித்த வன்முறையை பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 


நாட்டின் அராஸ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் நுழைந்த மாணவர் ஒருவர் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியப்படி கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்.


பலஸ்தீன ஆதரவு போராட்டம் மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் காரணமாக பிரான்சில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »