Our Feeds


Tuesday, October 3, 2023

News Editor

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!


 இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது.

பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும், புரிந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது.

மூவருக்கும் கூட்டாக இந்திய மதிப்பில் சுமார் 8.26 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால், தற்போது அது உலகம் முழுக்கப் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

கோவிட் தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வைரஸ், பற்றீரியா  போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்செயலாற்ற நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தயார்படுத்தும் வேலையை தடுப்பூசிகள் செய்கின்றன.

பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பமானது அசல் வைரஸ் அல்லது பற்றீரியாவின் இறந்த அல்லது பலவீனமான பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

அதற்கு மாறாக, mRNA தடுப்பூசிகள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர்.

கோவிட் பேரிடரின்போது உருவாக்கப்பட்ட, மாடர்னா, ஃபைசர்/பயோஎன்டெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

தடுப்பூசி ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தூண்டுகிறது. இது பிற்கால வெளிப்பாட்டின்போது நோய்க்கு எதிராக எதிர்செயலாற்ற நம் உடலுக்கு ஒரு தொடக்கத்தைக் கொடுக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »