Our Feeds


Monday, October 2, 2023

ShortNews Admin

நாமல் ராஜபக்ஷவின் திருமணத்திற்காக கெரண்ட் பில் 26 லட்சத்தை செலுத்தினார் சனத் நிஷாந்த.



நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட 26 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (02) இலங்கை மின்சார சபையின் பிரதான கிளையில் செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சனத் நிஷாந்த, தனது இறால் பண்ணையின் வருமானத்தில் இருந்து உரிய மின்சார கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்மூலம், நாட்டின் சாமானியர்களின் நிலை தொடர்பில் உங்களுக்கு வருத்தம் இல்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

நாட்டின் அனைத்து மக்களினதும் மின்சாரக் கட்டணத்தை தன்னால் செலுத்த முடியாது என சனத் நிஷாந்த தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »