Our Feeds


Monday, October 30, 2023

Anonymous

PHOTOS: இலவச சிங்கள மொழி பாடநெறியை பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்ற 2000 மாணவர்கள். - இஸ்திஹாரின் மற்றொரு சமூக சேவை.

 



கடுகன்னாவை குருக்குத்தலை மகா வித்தியாலயத்தை மையப்படுத்தி நடைபெற்ற இலவச சிங்கள மொழி பாடநெறியுடன் சேர்த்து 27 தொகுதி பாடநெறிகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 


கடுகன்னாவையில் நடைபெற்ற இப்பாட நெறிகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் குருக்குத்தலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்விற்கு மத்திய மாகாண மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கமைப்பாளர் திருமதி  H.K. விதான அவர்கள், பாடசாலையின் அதிபர் திருமதி ரீஸா ஷெரீன் அவர்கள், KDS அமைப்பின் அங்கத்தவர்கள் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


குருக்குத்தலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த 06 மாத சிங்கள மொழி பாடநெறியை குருக்குத்தலை அருநோதய அமைப்பினர் ஒழுங்கமைப்பு செய்திருந்தனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நான் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.


வயது, பிரதேசம் என பல வகைப்படுத்தல்களின் கீழ் கண்டி மாவட்டத்தில் நடத்திய இந்த இலவச சிங்கள மொழி பாடநெறியை எதிர்வரும் காலங்களிலும் நாம் இன்னும் மெருகூட்டி கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் முன் கொண்டு செல்ல எதிர்பார்த்து இருக்கின்றோம்.


பன்மைத்துவ சமூக அமைப்பில் மொழி தேர்ச்சியின் ஊடாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தி நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நாம் இந்த இலவச சிங்கள மொழி பாடநெறைய நடத்தி வருகின்றோம்.


2019 முதல் நான் தவிசாளராக இருந்த பொழுது எனது மாதாந்த தவிசாளர் கொடுப்பனவு மற்றும் சொந்த நிதியினை கொண்டு உலமாக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மொழி பாடநெறி இன்று ஒரு பெரும் வேலை திட்டமாக மாறி செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நேரத்தில் அந்த முதல் தொகுதி சகோதரர்களை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்த செயற்திட்டத்தினை சிறந்த முறையில் நடத்திச் செல்வதற்கு தொடர்ந்தும் துணை நிற்கின்ற சர்வ மத தலைவர்கள், நலன் விரும்பிகள், அரச அதிகாரிகள், பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவ மாணவியர், அவர்களது பெற்றோர் உட்பட அனைவருக்கும் நான் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »