Our Feeds


Monday, October 16, 2023

Anonymous

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 இலங்கைப் பெண்களுக்கும் என்ன நடக்கும்? - வெளியான அறிவிப்பு

 



இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.


ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த போது இரண்டு நாட்களுக்கு முன்னர் இரு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரண்டு பெண்களின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

“இரண்டு இலங்கை பெண்களும் ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்துள்ளனர், எனவே அவர்கள் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது” என்று தூதுவர் கூறினார்.

இருவரின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால விவகாரங்கள் தொடர்பாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் நான் ஒருங்கிணைத்து செயற்படுவேன் என தூதுவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »