Our Feeds


Tuesday, October 17, 2023

Anonymous

மக்களை தென் காசாவுக்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் - மருத்துவமனைகளுக்கு வந்த 110 உடல்கள்

 



காசாவின் மருத்துவமனைகளுக்கு  110 உடல்கள் வந்து சேர்ந்தன என முகமத் ஜகாவுத் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.


தென்காசாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்களே வந்துள்ளன என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அல் நசீர் மருத்துவமனைக்கு 40 உடல்களும் ரபா எல்லையில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 60 உடல்கள் நஜார் மருத்துவமனைக்கும் வந்தன என தெரிவித்துள்ள அவர் ஐரோப்பிய மருத்துவமனைக்கு 10 உடல்கள் வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்களின் உடல்கள் சிலவற்றை  மீட்புகுழுவினர் மீட்டெடுத்து அனுப்பி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளன - சில உடற்பாகங்களை  எங்களால் அடையாளம் காணமுடியவில்லை என CNN க்கு தெரிவித்துள்ள அந்த மருத்துவர் வடகாசவிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களின் வீடுகளே தாக்கப்பட்டுள்ளன எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வீட்டில் மாத்திரம் 150 பேர் தஞ்சம்புகுந்திருந்தனர் இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 பேர் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »