தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடபத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் வரையான வாகன பேரணியிலேயே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை கப்பற்துறையில் வைத்து இந்த தாக்குதல் நத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது குறித்த ஊர்தியில் பயணித்த செல்வராசா கஜேந்திரன் உட்பட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.