செனல் 4 ஆவணப்படம் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அசாத் மெளலானா தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
விழுதுகள் என்ற வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சலேவுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு காணப்பட்டதாகவும், அவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகளுக்கு இடையிலான சந்திப்புகளை தான் ஏற்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.