''பொலிஸ்காரர்களை போலவும், நீதிமன்ற கட்டளை இருப்பதாகவும் நடித்து அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்கள் இவர்கள் என சற்றுமுன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் சொன்னேன். கம்பனி காடையர்களை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்'' என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கூறியுள்ளார்.
இரத்தினபுரி காவத்தை பிளான்டேசன் வெள்ளந்துரை தோட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது;
ஒவ்வொருமுறையும் சம்பவம் நடக்கிறது. நாம் கேள்வி எழுப்புகிறோம். நீங்கள் பதில் கூறுகிறீர்கள். அல்லது ஒரு அரசாங்க அரசியல்வாதியை அங்கே அனுப்பி அதன் பின் ஒளிந்து கொள்கிறீர்கள். இதற்கு தீர்வுதான் என்ன? என்று மேலும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணரிடம் கேட்டேன்.
இந்த கம்பனிகாரர்களுடன் பணியாற்ற முடியவில்லை. ஜனாதிபதியிடம் பேசி முழுமையான தீர்வை தேடுவோம் என எனக்கு பதிலளித்தார் என ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.