உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
2019 ஜனாதிபதி தேர்தலில் நானும் போடியிட்டேன். ஆனால் கோட்டாபய ராஜபக்ஸவுக்கே வாக்களிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போது கோரியிருந்தார் என்றும் சஜித் பிரேமதாஸ நினைவூட்டினார்.
பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (05) விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேற்கடவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிட்டேன். அப்போது கோட்டாபய ராஜபக்ஸவுக்கே வாக்களிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.அவர் எனக்கு எதிராக வாக்களிக்குமாறு தெரிவித்தமையை நான் பொருட்படுத்தவில்லை என்றார்.