நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் அவர்களுக்கு நீங்கள் புலி என்கிறீர்கள், அது சரி அவர் எல்டிடிஈ உடன் சம்பந்தப்பட்டு இருந்தார் பின்னர் அவர் திருந்தியதை நினைவில் வைத்திருக்கட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;
“…. சந்தேகம் ஒன்றினை உருவாக்கி ஆடாதீர்கள்.. சாட்சியார்கள் வெளிநாடு செல்கிறார்கள் என்றால், அன்று உங்கள் ஆட்சியில் தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கலாமே.. நீங்கள் தான் அவர்களை பாதுகாத்தீர்கள்.
தெளிவாக இவர்கள் கூறுவது சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுவிட்டார்களாம்.. யகோ.. 2019 சம்பவத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வரையில் ஏன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? எதிர்க்கட்சித்தலைவரே நீங்களும் அந்தக் குழுவில் இருந்தீர்கள் தானே, ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்? தடுத்திருக்கலாமே? உங்கள் ஆட்சியில் தான் இது நடந்தது
2015 இலிருந்து 2019 வரை உங்கள் ஆட்சிதானே.. பொய்யாக ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல்வாதிகள் மீதும் குற்றஞ்சாட்ட வேண்டாம்…”
“.. பிள்ளையான் எம்பிக்கு நீங்கள் புலி என்கிறீர்கள், அது சரி அவர் LTTE உடன் சம்பந்தப்பட்டு இருந்தார். தலதா மாளிகையை தாக்கும் போது இருந்திருக்கலாம். எனக்குத் தெரியாது. அவர் அதில் இருந்தார் என்றால் ஆம், நான் அதில் இருந்தேன் அவ்வளவுதான்..
ஆனால் நினைவில் வைத்திருங்கள், LTTE அமைப்பு பலவீனமாகக் காரணம் LTTE அமைப்பில் இருந்தோர் பிரிந்து சென்று அரசுக்கு தகவல் வழங்கியது தான். உங்கள் ஆட்சியில் தான் அதுவும் நடந்தது. அவ்வாறு இருக்கும் போது மீண்டும் மீண்டும் புலி என்று கூற வேண்டாம்.
அப்படிப்பார்த்தால் எதிர்கட்சித் தலைவரின் தந்தை LTTE இற்கு கப்பலில் ஆயுதம் அனுப்பியதாகவும் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.. அவர்களுக்கும் நாம் புலி என்று கூற வேண்டுமே.. அப்படி கூறுவதில்லையே. அவ்வாறு கூற முடியாது. அது யுத்த தந்திரங்கள் என்றும் கூறலாம்.. ராஜபக்சர்கள் மீது அப்படி ஒரு பயம் ஏன்? சொல்வதை கேளுங்கள்.. நாங்கள் பிரேமதாச அவர்களுக்கு புலி என்றோ எதிர்கட்சித் தலைவருக்கு புலி என்றோ கூறவில்லை.
நாம் எச்சந்தர்ப்பத்திலும் தாக்குதலுக்கு நல்லாட்சி அரசு காரணம் என்று கூறவில்லை. நல்லாட்சி அரசு உருவானதே முஸ்லிம் மக்களின் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைத்தன. இதற்கான தீர்வு வேண்டுமெனின் கட்சி கட்சியாக பிரிய வேண்டாம். ஒன்றாக செயற்படுவோம். அதை விட்டு ஒவ்வொருவர் மீதும் விரல் நீட்ட வேண்டாம்..
நாம் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. ரிஷாத் எம் பியை நாம் குற்றஞ்சாட்டவில்லை. நான் திருமணம் முடித்திருப்பவர் தமிழச்சியை, 83 கருப்பு ஜூலை கலவரத்தின் போது எனது மனைவியை எனக்கு வெளியே கூட்டிச் செல்லக் கூட முடியவில்லை. இன்றும் அன்றுபோலவே இனவாதத்தினை பரப்புகிறீர்கள், இவ்வாறு நாய் வேலை செய்யாதீர்கள்.. “