அம்பை எய்தவனை விடுத்து அம்பை காட்டி ஈஸ்டர் விஷயத்தை திசை திருப்பி அரசாங்கத்தை காப்பாற்ற முனையும் முஷர்ரப் MP யும் முஸ்லிம் சமூகத்தின் துரோகிதான் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பாராளுமன்றில் சாடல்.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பேசிய வேலுகுமார் மேலும் பேதியதாவது,
அஸாத் மௌலானாவை முஷர்ரப் முஸ்லிம் சமூகத்தின் துரோகி என்கிறார். ஆம், அஸாத் மௌலானா மட்டுமல்ல ஸஹ்ரான் மட்டுமல்ல அம்பை எய்தவனை விடுத்து அம்பை காட்டி இதனை திசை திருப்பி முஸ்லிம் மக்களின் இழந்த கௌரவத்தை காப்பாற்ற கிடைத்துள்ள தேடலை தடுத்து அரசை காப்பாற்ற நினைக்கிற நீங்களும் சமூகத்தின் துரோகி தான். இது வெட்கக் கேடானது.