Our Feeds


Friday, September 15, 2023

ShortNews Admin

VIDEO: காத்தான்குடியில் IS பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்களா? பிள்ளையான் ஏன் இதனை பாதுகாப்பு தரப்புக்கு சொல்லவில்லை? - ஹிதாயத் சத்தார்.



சஹ்ரான் தலைமையிலான ISIS பயிற்சி பெற்றவர்கள் இன்றும் காத்தான்குடியில் இருப்பதாக ShortNews.lk நேர்காணலில் பிள்ளையான் என்கிற அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் LTTE பங்கரவாதிகளின் கிழக்கு மாகாண தளபதியுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகிறார்.


ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே வரலாற்று துரோகமிழைத்தது மட்டுமல்லாமல் நாட்டில் பல அப்பாவி மக்களை கொன்று குவித்த ஒரு பங்கரவாதியும் இன்றைய அரசியல்வாதியுமான பிள்ளையான்  கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவியில் அமர்த்த முழு நாட்டுக்குமே துரோகமிழைத்துவிட்டார். 


மீண்டுமொரு முறை முஸ்லீம் சமூகத்தை பகடைக்காயாக மாற்ற எத்தனிக்கும் இந்த துரோகியின் புனைக் கதைகளை கேட்க மக்கள் முட்டாள்கள் அல்ல என்றும் இவ்வாறு காத்தான்குடியில் ISIS பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்றால் ஒரு இராஜாங்க அமைச்சர் என்கிற வகையில் பங்கரவாத அமைப்போடு இருந்தவர் இப்போது நல்லவன் என்கிற அடிப்படையில் அடிக்கடி குற்றவியல் விசாரணை பணியகத்துக்கு (CID) செல்லும் இவர் ஏன் இன்னும் இது சம்பந்தமாக பாதுகாப்பு தரப்புக்கு புகார் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண முன்வரவில்லை? 


சஹ்ரானுடன் சிறையில் இருந்ததை ஒப்புகொண்ட பிள்ளையான் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் ஏன் பதில் இல்லை?


எனவே இன்றைய ஜனாதிபதி கெளரவ ரனில் விக்ரமசிங்க அவர்கள் அன்று பிரதமராக இருந்தபோது எங்களுடைய ‘நல்லாட்சியில்’ நடைபெற்ற இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தப்பட்ட சரியான பின்னணியை இன்று சேனல் 4 வீடியோ வெளியானதன் பின்னர் கோட்டபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சி என்பது அம்பலமாகியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கும், பெளத்தர்களுக்கும் விஷேடமாக கிறீஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவை சரி செய்வற்கு இது சம்பந்தமாக சர்வதேச விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 


மேலும் அவசரமாக பிள்ளையான் தப்பி ஓட முன் வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு பெற வேண்டுமென்பதனோடு அசாத் மௌலானா சொல்ல முன்னரே உயிர்த்த ஞாயிறு ஈஸ்டர் தாக்குதலுக்கு ராஜபக்சவினர் காரணம் என்பது மக்கள் நன்கு அறிந்த விடயம் எனவே உண்மைய கண்டறிவதற்கு சர்வதேச புலனாய்வு பிரிவினரின் ஆதரவுடன் சுயாதீனமான உள்ளக விசாரணை பொறிமுறை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »