கொழும்பில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி மழைக்கு முன்னதாக 24.1 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.
குறித்த இந்த போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.