ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மாதிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபோதையில் காணப்பட்ட இவர், மாடி வீட்டு பல்கனியிலிருந்து மூன்று முறைகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று (5) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.