Our Feeds


Monday, September 18, 2023

ShortNews Admin

SLPP பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன?



அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் அநுராதபுர விமான நிலைய வீதியிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து நேற்றிரவு (17) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 


இதன்போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வேனில் வந்த சிலர் இரவு 10.45 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.


கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உத்திக, தற்போது நாடாளுமன்றில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். 


இந்தநிலையில், சிசிரிவி காணொளிகள் ஊடாக, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »