கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவார் என தான் நம்பவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளார் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே
அவர் இவ்வாறு கூறினார்.
” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை வகித்தவர், அவருக்கு நாம் முழு ஆதரவையும் வழங்கினோம். எனினும், அவர் பதவி விலகிச்சென்றார், அவ்வாறு சென்றவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை. அது கட்டுக்கதையாகவே இருக்கக்கூடும்.” எனவும் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டார்.