ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட – ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பையடுத்து, பகிரப்பட்ட ஜனநாயகத்தின் பொதுவான இலக்கை நோக்கிச் செயற்படும் நோக்கில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்கப் போவதாக நாடாளுமுன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றம் நுழைந்த அசங்க நவரத்ன, குருநாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.