தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (24) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்நூலின் முதற்பிரதியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது.
23 வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளராக மனுஷ நாணயக்கார ஆரம்பித்த தேடலின் பிரதிபலிப்பாக இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது.
இலங்கையின் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றை வலதுசாரி பகுப்பாய்வுடன் ஒரு புத்தகத்தில் படிக்க இதன் ஊடாக வாய்ப்புக் கிடைக்கிறது. மேலும் முழு தொழிலாளர் இயக்கம் மற்றும் எதிர்கால தொழிலாளர் சந்தை பற்றிய தெளிவான பார்வையையும் புத்தகம் முன்வைக்கிறது.
தொழிற்சங்கம் தொடர்பில் இதுவரையில் எழுதப்பட்டுள்ள நூல்கள் மற்றும் பிரசுரிப்புக்கள் என்பவற்றை ஆராய்ந்து தொழிலாளர் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடயங்களை இதனூடாக எடுத்துக்காட்ட முயன்றுள்ளமை தெளிவாகிறது.
உலக தொழில் அமைப்புக்களுக்கு நிகராக இலங்கையின் தொழில் அமைப்புக்களும் நவீனமயமாக வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.