ஜே.எம்.பாஸித் - கத்தார்
ஐக்கிய தமிழ் மன்றம் நடத்திய சுதந்திரதின கட்டுரை போட்டியின் முடிவறிவிப்பு மற்றும் பரிசளிப்பு விழா தலைவர் தஸ்தகீர் சுலைமான் தலைமையில் (14/09/2023) நேற்று Wonder Palace அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் முஹம்மது உசைன் நிகழ்ச்சியை தொகுத்து, துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது உவைஸ் வரவேற்புரையாற்றி, ஊடகப் பிரிவு செயலாளர் ஹாஜா செயல்பாடு அறிக்கை வாசிக்க, பொதுச் செயலாளர் ஷாஹுல் ஹமீது, துணைத் தலைவர் சித்திக் மைதீன், துணைச் செயலாளர் தாஹிர், உறுப்பினர்கள் பஷீர், கமருதீன், அப்துர் ரஹ்மான், முஹம்மது பாரூக், தன்னர்வலர் பாபு ஆகியோர் கலந்து கொள்ள, கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் அறிவித்த பரிசுத் தொகையும் வழங்கி பாராட்டப்பட்டது. இதில் கட்டுரைப் போட்டியின் மேற்பார்வையாளராக செயல்பட்ட முனைவர் வாசுகி சத்தியபாபு, ICBF தலைவர் திரு. ஷாநவாஸ் பாவா, பொதுச் செயலாளர் வர்கிஸ் போபன், இளைஞர்நல நிர்வாகி சமீர் அஹ்மத், ஆலோசனைக்குழு உறுப்பினர் இராமசெல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் கத்தாரிலுள்ள பேரவைகள், ஜமாத்துகள் மற்றும் சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
இறுதியில் பொருளாளர் ஹசன் பஸ்ரி நன்றியுரை கூறி நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.