கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ‘பெட் ஸ்கேன்’ (PET SCAN) பரிசோதனை நடவடிக்கைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படுமென அரசாங்கத்தின் மரபியல் விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்ம விக்கிரம தெரிவித்தார்.
குறித்த இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை செய்யும் தொழில் வல்லுநர்கள் சேவையிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறுவதே இந்த நிலைமைக்குக் காரணம் எனவும் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் ‘லினிட்டர் ஆக்சிலரேட்டர்’ இயந்திரங்கள்பல மாதங்களாக செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.