Our Feeds


Monday, September 18, 2023

ShortNews Admin

கஜேந்திரன் MP மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – இதுவரை 6 பேர் கைது



நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

தியாகி திலீபனின் 36 வருட நினைவேந்தலை முன்னிட்டு திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியொன்று வாகனப் பேரணி பொத்துவிலில் இருந்து அவர் உயிர்நீத்த இடமான யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. 



இந்நிலையில் நேற்று மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, குறித்த வாகனப் பேரணி பயணித்துக் கொண்டிருந்தபோது சர்தாபுரம் பகுதியில் சிங்களக் காடையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 


 

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல தரப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.



குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 


 

கைதானவர்களை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »