கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒல்கெட் மாவத்தை பகுதியின் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மரத்தை அகற்றும் பணிகுளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதன்படி , மருதானை, அமர்வீதி உள்ளிட்ட பல வீதிகள் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் இன்று சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு நகரிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.