Our Feeds


Saturday, September 9, 2023

ShortNews Admin

FaceBook காதல் - இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் சகோதரி கொழும்பில் மர்ம மரணம்!!



பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இலங்கை இளைஞனின் அழைப்பின் பேரில் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த பெண் மற்றும் இளைஞன் கல்கிஸ்ஸை – அல்விஸ் பிளேஸில் உள்ள “ப்ளூ ஓஷன் தொடர்மாடியில் தங்கியிருந்த நிலையில் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் நாளை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவருடன் பேஸ்புக் ஊடாக உறவை பேணிய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சட்டக்கல்லூரி மாணவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பதில் நீதவான் திருமதி ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »