பாதாள உலகத் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படும் நதுன் சிந்தக அல்லது ஹரக்கட்டா தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்படடுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை திருட முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹரக்கட்டாவுக்குப் போடப்பட்டுள்ள கைவிலங்குகளை கழற்றி வைத்து விசாரிக்கும்போது, தான் கழிப்பறைக்கு செல்ல விரும்புவதாக கூறியதாகவும், கழிவறையில் இருந்து திரும்பி வந்ததும், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் துப்பாக்கியை திருட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனை அவதானித்த மற்றைய பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.