சனல் 4க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் அதற்கான பல வழிமுறைகள் உள்ளன என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஒரு நம்பகதன்மையற்ற ஊடகம் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் என நன்கறியப்பட்டவர்கள் சனல் 4 ஊடகத்தினர் என தெரிவித்துள்ள அவர் அவர்களின் செய்திகள் நம்பகதன்மையற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
கேள்வி- 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?
பதில்- அவர்கள் தெரிவித்துள்ள விடயங்களில் உள்ள உண்மையை ஆராய்ந்து உறுதி செய்த பின்னர் அவர்களிற்கு எதிராக எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியும்.
அதனை செய்வதற்கான பல வழிமுறைகள் உள்ளன
கேள்வி
சமூகத்தின் பல தரப்பினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆட்சிமாற்றத்தை நோக்கமாக கொண்டது எனவும் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன - உங்களால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியுமா?
பதில்- குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன அதன்காரணமாக நாங்கள் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்,இந்த சம்பவத்திற்கு முன்னர் நான் சில விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தேன் அது உங்களிற்கு நினைவிருக்கலாம்,
சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அது குறித்து விசாரணைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர் குற்றம்சாட்டப்பட்ட 19 பேருக்கு எதிராக 42 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
புதிய தகவல் ஏதாவது கிடைத்தால் நாங்கள் அது குறித்து விசாரணைகளை நடத்துவோம்.
கேள்வி - உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் நீங்கள் தெரிவித்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருந்தால் அதனை தவிர்த்திருக்கலாம் என சர்வதேச நிபுணர் ரொகான் குணரட்ண தெரிவித்துள்ளாரே?
பதில்-
நான் அவ்வேளை தெரிவித்தது வெறுமனே கருத்து கிடையாது இலங்கையில் இரத்தக்களறியை உருவாக்குவதற்கான சதிதிட்டம் குறித்துசில தகவல்கள் கிடைத்துள்ளன என நான் தெரிவித்தேன் அது வெளிப்படையானது.
எனினும் சனல் 4 அவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழக்கூடும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நீதிபதிகள் மற்றும் நீதித்துறையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உறுதி செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நான் பிரதமநீதியரசரிற்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளிற்கும் கடிதமொன்றை எழுதியுள்;ளேன்,
இந்த குற்றச்சாட்டுகள் பொய் என்றால் போலியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு;ள்ளவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன்.
கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவையும் நாடாளுமன்ற குழுவையும் நியமித்துள் நிலையில் புதிய குழுவை நியமித்துள்ளதன் நோக்கம் என்ன
பதில்- இது இன்னமும் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது.
ஜனாதிபதியானதும் ரணில்விக்கிரமசிங்க தான் புதிய விசாரணைகளை முன்னெடுக்கவும் ஸ்கொட்லாண்ட் யார்டை கொண்டுவரவும் தயார் என தெரிவித்தார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிடமிருந்தும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடமிருந்தும் இது குறித்து எந்த பதிலும் வெளியாகவில்லை.
அதன் பின்னர் நாங்கள் விசாரணை அறிக்கைகளை ஆயர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம்,அவ்வேளையும் எவரும் வெளிநாட்டு விசாரணைக்கு இணங்கவில்லை.
குற்றச்சாட்டுகளின் உண்மையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்.
கேள்வி - சர்வதேச உதவியை பெறவேண்டிய அவசியம் உள்ளதா உள்நாட்டு விசாரணை போதுமானதா?
பதில்
உண்மையில் இது சர்வதேச ஆணைக்குழுவோ நீதிமன்றமோ இல்லை,- விசாரணையாளர்களின் ஆதரவை பெறுவதே அவசியம்.
sunday observer