நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட புலத்சிங்கள ஹல்வத்துறை தமிழ் வித்தியாலயம், பரகொட கித்துல கொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மேல் வெல்கம கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம், வெள்ள அபாயம் குறையும் வரை சிறுவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.