முல்லைத்தீவு – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ரீ. சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவியை இராஜினாமா செய்த நீதிபதி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவருகின்றது.
தான் எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்வதாக அவர் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23ம் திகதி பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு, நீதிபதி அனுப்பியுள்ளார்.
அவர், தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.