இலங்கை தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட சமீபத்திய காணொளி தொடர்பில் விளக்கமளித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனக்கும் எச்சித்க தொடர்பும் இல்லை என்றும், உரிய தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைக்கு தானே உத்தரவு அளித்த தாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் சேனல் 4 இன் இந்த சமீபத்திய படம், 2005 முதல் ராஜபக்ச ஆட்சியைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் ராஜபக்சவுக்கு எதிரான தாக்குதலாகும். முன்பு இதே சேனலால் இலங்கை பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆவணப்படங்கள் போலவே இதுவும் பொய்களின் கூட்டம். என்னை ஜனாதிபதியாக அமர்த்துவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு கொடிய குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது முற்றிலும் அருவருப்பானது எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், நான் பொதுப் பதவியில் இருந்த போதெல்லாம் ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது;