டுபாய் இராச்சியத்திலிருந்து சட்டவிரோதமான முறையில்
தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை நாட்டுக்கு கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் 75 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், பாராளுமன்றத்தில் பதவி வகிக்கும் சகல குழுக்களிலும் இருந்து அவரை நீக்குமாறு அறிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.அந்த யோசனை பாராளுமன்ற புதிய ஒழுங்குவிதிகள் கோவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் அலி சப்ரி ரஹீம் எம்.பி.க்கு பிரதிநிதித்துவம் இருப்பதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.