கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று தடம் புரண்டமையால், கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில்கள்தனி வழியாக்கப்பட்டுள்ளன.
ஆகையால், கரையோர ரயில் மார்க்கத்தின் ஊடாக கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகள் மாற்று போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துமாறு, ரயில்வே பொது முகாமையாளர்( செயற்பாடுகள்) டீ.எஸ் பொல்வத்தகே தெரிவித்தார்.
தனி வழியில் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால், கொழும்புக்குள் நுழையும் ரயில்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையால், கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில்கள் சில இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்கள் பல மணிநேரம் தாமதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.