விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய வெளிநாட்டு விமானிகளை நியமிக்க அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.