இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் வேலைத்திட்டம் இராணுவத்திடமிருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி ஒன்றுக் கூடி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவே இந்த வேலைத்திட்டம் இராணுவத்திடமிருந்து மீளப்பெறப்பட்டுள்ளது.
நாட்டுக்கு 81 கோடி 07 இலட்சத்து 99 ஆயிரத்து 495 ரூபா மிகுதியை (இலாபத்தை) இராணுவம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மூலம் பெற்றுக்கொடுத்தது.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இந்த வேலைத்திட்டத்தினூடாக இராணுவத்தினால் 24 இலட்சத்து 34 ஆயிரத்து 467 நிலையான மற்றும் தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
சாரதி அனுமதிப்பத்திர அச்சீட்டு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவ தகவல் தொழில்நுட்பம் பிரச்சினைகளுக்கு தீர்ப்பளிப்பதற்கான நிலையத்தின் கீழ் 10 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஒன்லைன் ஊடான சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் 15 நிலையங்களினூடாக ஒன்லைன் அற்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட விநியோக செயற்பாகளும் மீண்டும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.