வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநில அரசு நடத்தும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் பங்கேற்க வேண்டும் என மமதா பானர்ஜி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக மமதா பானர்ஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவில், துபாய் சர்வதேச விமான நிலைய காத்திருப்பு பகுதியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை பார்த்தார். தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பும் விடுத்தார்.
அப்போது வரும் நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தேன். இலங்கைக்கு வருகை தர வேண்டும் என ரணில் எனக்கு அழைப்பு விடுத்ததாகவும் மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.