திருகோணமலை – குச்சவெளி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முதல் நடாத்தப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குச்சவெளி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மணல் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பிராதேச மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த மணல் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், தமது எதிர்கால சந்ததிக்கு இயற்கை வளங்கள் இல்லாமல் போவதாகவும் மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் என குச்சவெளி மக்கள் வலியுறுத்துகின்றனர்.