கடுகண்ணாவை பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்து
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 137,000 ரூபாய் பண மோசடி செய்த நபரொருவர் கடுகண்ணாவையில் வைத்து நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான நபர் காலி, மீரன்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த, சந்தேக நபருக்கு எதிராக மத்துகம, மஹர, பன்னல, கோட்டை, கேகாலை, தம்புள்ளை, நுவரெலியா, காலி, பலப்பிட்டிய, அநுராதபுரம், நுகேகொடை, களுத்துறை மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் 13 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.