Our Feeds


Saturday, September 9, 2023

ShortNews Admin

பிரபல பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்து வீடியோவை பரப்பியவர் அதிரடி கைது - நடந்தது என்ன?



மொரவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை 07ம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கைது செய்துள்ளதுடன், அதிபருக்கும் ஏனையோருக்கும் நிர்வாண காணொளிகளை WhatsApp சமூக ஊடகங்களில் அனுப்பியுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டில் வைத்து 11 தடவைகள் வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய போது, ​​சந்தேக நபர் வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சந்தேக நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த சம்பவத்தினை பதிவு செய்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோ காட்சிகளை சந்தேக நபர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த காட்சிகள் பெண் பாடசாலை அதிபருக்கும் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பாதிக்கப்பட்ட சிறுமியை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பிவைத்து சந்தேக நபரை மொரவக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »