Our Feeds


Sunday, September 24, 2023

SHAHNI RAMEES

ஜேர்மனிக்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் இரவு ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேர்லின் உலகலாவிய விவாதத்தில் பங்கேற்பதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாநாட்டில் உரையாற்றவும் உள்ளார்.




தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு 



உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகலாவிய

விவாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.




ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்க விஜயங்களை முடித்துக் கொண்டு இன்று (24) காலை இலங்கை வந்தடைந்தார்.




சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்கான இறுதிக் கலந்துரையாடலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »