தாய்வானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அங்குள்ள காஹ்சியுங் நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சாய்-இங்-வென் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என தெரிவித்தார்.
இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டொன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.