உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு
தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நாளை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடைபெறவுள்ளது.இந்த முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு சமீபத்தில் முடிவு செய்தது.
விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவாதம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.