ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கேட்டு, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பத்திரத்தை செயற்படுத்துவதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கட்டளைப் பிறப்பித்துள்ளது.
தன்னுடைய வாடிக்கையாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதாகவும் அதுதொடர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவதற்கு கட்சியின் தலைவருக்கு கட்சியின் யாப்பின் பிரகாரம் அதிகாரம் இல்லையென தயாசிறியின் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
முன்வைக்கப்பட்ட காரணங்களை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதவான், இவ்வாறு இடைக்கால கட்டளையை பிறப்பித்துள்ளார்.