தான் எந்த பக்கம் இருக்கின்றார் என்பது வடிவேல் சுரேசுக்கே தெரியாது. எந்த பக்கம் என்பது தொடர்பில் அவர் முடிவொன்றை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
வடிவேல் சுரேஷ் போன்ற அரசியல்வாதிகள், அரசியலில் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எந்த பக்கம் என்பது குறித்து தீர்மானமொன்றை எடுக்குமாறு நான் கூறினேன், ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாக கூறினார். ஆனால் சரியான தீர்மானமொன்றை எடுக்குமாறும், இல்லையேல் இருக்கும் வாக்கு இல்லாமல் போகும் எனவும் கூறினேன். முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி காட்டட்டும்.” – என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.