Our Feeds


Saturday, September 30, 2023

Anonymous

ஆபாச இணையதளங்களுக்கு விற்க்கப்படும் இலங்கையர்களின் வீடியோக்கள் - தடுக்க என்ன வழி?



ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களினுடைய வீடியோகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கட்டண சந்தா அடிப்படையிலான இணைய தளங்கள் உட்பட முன்னணி ஆபாச இணைய தளங்களில் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை தம்பதிகளினுடைய காணொளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன.


இவ்வாறான வீடியோக்களில் இலங்கை ஆபாச நட்சத்திரங்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் எடுக்கப்பட்டவை இடம்பெற்றுள்ளன. அவற்றில பெரும்பாலானவை தம்பதிகளின் இணையர்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இலங்கையில் இயங்கும் இலங்கைப் பெண்களைக் கொண்ட ஆபாச இணைய தளங்களில் இவை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.


இவற்றில் இருவரின் அல்லது ஒருவரின் அனுமதியின்றி பெரும்பாலான உள்ளடக்கங்கள் படமாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன அல்லது ஆபாச இணைய தளங்களுக்கு விற்கப்பட்டதாக அச்சம் உள்ளது.


சர்வதேச ஆபாச வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிடுவதற்கான நோக்கங்களில் ஒன்றாக பழிவாங்கலும் காணப்படுகிறது.


பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடியோக்கள் அல்லது படங்கள் ஆபாச வலைத்தளங்களில் வெளியிடப்படுவது குறித்து புகார் அளிக்க முன்வர மறுக்கின்றனர். அப்படிச் செய்யும் போது அந்த வீடியோக்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்றும் தங்கள் மதிப்பு மேலும் கெடுக்கும் என்றும் அஞ்சுகிறார்கள்.


இது தொடர்பில் சட்டத்தரணியும் பாலின பயிற்சியாளருமான ஜெருஷா க்ரோசெட் தம்பையா கூறுகையில், இதுபோன்ற உள்ளடக்கத்தை விற்பது தண்டனைச் சட்டத்திலும் ஆபாசச் சட்டத்திலும் குற்றம் என்று கூறியுள்ளார்.


பகிர்ந்தவர் அல்லது அத்தகைய வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை எடுத்தவர் மீதும் வழக்குத் தொடரலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்யலாம் அல்லது நேரடியாக இணையத்தளத்தை அணுகி வீடியோக்களை அகற்றுமாறு கோரலாம் என்றும் சட்டத்தரணி ஜெருஷா க்ரோசெட் தம்பையா மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »