இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெருமளவானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தே செயற்படுகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அவர்களை இலங்கைக்கு கொண்டுவந்து சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறிப்பாக துபாயில் வசிக்கின்றனர் தங்கள் சகாக்கள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களை கண்டுபிடிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவேளை அவர்களை கண்டுபிடிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எத்தனை பேர் அங்குள்ளனர் என்ற கேள்விக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ளனர் எனினும் துல்லியமான எண்ணிக்கை தெரியாது என டிரான் அலெஸ்தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதல் காலாண்டு பகுதியில் 35 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.