உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அரசாங்கத்திற்கு பரிசாக கிடைத்த பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பான வழக்கில் கடந்த மாதம் மாதம் 5 ஆம் திகதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணைக்காக இவருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது 3 ஆவது முறையாக மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மத் குரேஷிக்கும் விளக்கமறியலை நீடித்து விசேட நீதிமன்றம் உத்தரவிட்டது.